ஒப்பந்தங்களை மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! அமைச்சர் கஞ்சன விடுத்துள்ள பணிப்புரை
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் இயக்கப்படும் 1050 எரிபொருள் நிலையங்களில் 432 எரிபொருள் நிலையங்கள் மாத்திரமே கடந்த வாரம் அனைத்துப் பொருட்களிலும் குறைந்தபட்ச இருப்பைப் பராமரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுக்கு எதிராக மீளாய்வு செய்து தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனத்திற்கு பணிப்புரையும் விடுக்கப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர இட்டுள்ள பதிவில்,
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் இயக்கப்படும் 1050 எரிபொருள் நிலையங்களில் 432 எரிபொருள் நிலையங்கள் மாத்திரமே கடந்த வாரம் அனைத்துப் பொருட்களிலும் குறைந்தபட்ச இருப்புப் பராமரித்தது தெரியவந்தது.
A progress review meeting was held with CPC & CPSTL yesterday. It was revealed that only 432 Fuel stations out of 1050 operated by CPC have maintained minimum stock on all products last week & that 255 dealers have failed to maintain minimum stocks for any products while 363… pic.twitter.com/awqThXA3WE
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 8, 2023
மொத்தம் 255 விநியோகஸ்தர்களும் எந்தவொரு தயாரிப்புக்கும் குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்கத் தவறியுள்ளனர், அதே நேரத்தில் 363 விநியோகஸ்தர்கள் ஒரு தயாரிப்புக்கான குறைந்தபட்ச இருப்பை வைத்துள்ளனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், ஒப்பந்தங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த 18 மாதங்களுக்கான சரக்கு திட்டம், CPC இன் இருப்புநிலை மறுசீரமைப்பு, போக்குவரத்து பெளசர்களுக்கான கொடுப்பனவுகள், தேசிய எரிபொருள் QR விநியோகம், நாடளாவிய எரிபொருள் விநியோகத் திட்டம் மற்றும் CPSTL இன் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டம் ஆகியவை இதன்போது மீளாய்வு செய்யப்பட்டு கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் தனது பதிவில் அமைச்சர் குறி்ப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |