எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேங்கியுள்ள பெட்ரோல்:கியூ. ஆர் முறையால் வந்த விளைவு
நாள் ஒன்றுக்கு 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கக் கூடிய இயலுமை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு உள்ளபோதும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கொள்வனவு செய்வதற்கு பின்னடிக்கின்றன என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் வட பிராந்தியக் கிளையினர் தெரிவித்துள்ளனர்.
'கியூ. ஆர்’ குறியீட்டு முறைமைக்கு அமைவாக எரிபொருள் வழங்கலை மேற்கொள்ளாத 12எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
அந்த 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குள் வடக்கில் எந்தவொரு நிரப்பு நிலையமும் உள்ளடங்கவில்லை.
நாள் ஒன்றுக்கு 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான பெட்ரோல் விநியோகிக்க முடியுமாக இருக்கின்றபோதும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கொள்வனவில் ஆர்வம் செலுத்தவில்லை.
கியூ.ஆர் குறியீடு
கியூ. ஆர் குறியீட்டுக்கு அமைய விநியோகம் நடைபெறுவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கொள்வனவு செய்த பெட்ரோல் தேங்கியுள்ளமையாலேயே இவ்வாறு அவை கொள்வனவில் ஆர்வம் செலுத்தாமைக்கு காரணம் என்றும் வட பிராந்தியக் கிளையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
May you like this Video