முச்சக்கரவண்டி சாரதிகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான சந்தர்ப்பம்
இதன்படி, முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நாட்டில் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்தும் எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது குறித்து அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நாட்டில் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

எனினும் பொலிஸாரின் தலையீட்டினால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க மற்றும் முச்சக்கரவண்டி சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri