சிறிலங்கா சுதந்திரக்கட்சியை 170 மில்லியன்களுக்கு விற்பனை செய்யவில்லை: மைத்திரிபால
சிறிலங்கா சுதந்திரக்கட்சியை 170 மில்லியன்களுக்கு விற்பனை செய்யவில்லை எனவும் கட்சி உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்காகவே தாம், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் நோக்கில் தேசிய சதித்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நீதிமன்றத் தடை உத்தரவு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அந்த பதவியை வகிக்கத் தகுதியான வேறு எவரும் இல்லாத காரணத்தினால், விஜயதாச ராஜபக்சவை கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, எனக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவை பெற்றுக்கொண்டதன் பின்னணியில், நான், எனது பதவியில் இருந்து விலகவில்லை என்றால், தொகுதி அமைப்பாளர்கள் யாரும் போட்டியிட முடியாது.
அத்துடன் தேர்தலில் அத்தகைய வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் ஏற்காது.
எனவேதான் நான், தலைவர் பதவியில் இருந்து விலகியதாக மைத்ரிபால குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பதில் தலைவராக கலாநிதி விஜயதாச ராஜபக்ச பதவியேற்ற போது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
நீதிமன்ற வழக்குகளுக்கு நிதி கிடைக்காததால் தாம் 170 மில்லியன் ரூபாய்களுக்கு கட்சியை விற்றதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. எனினும் அது உண்மையல்ல” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனுராதபுரத்தில் இன்று(17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விஜயதாச ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |