மைத்திரிக்கு எதிரான தடையை பயன்படுத்தி ரணிலை வெற்றிபெறச் செய்யும் முயற்சி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு(Maithripala Sirisena) விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை பயன்படுத்தி சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு ஜனாதிபதி ரணிலை வெற்றி பெறச் செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிக்கு இடைக்காலத் தடை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்காலத்தடை மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது.
அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் சுதந்திர கட்சியை இணைப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்க இடமளிக்கப்பட மாட்டாது.
எதிர்வரும் 18ஆம் திகதி வரை மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரணிலை வெற்றிப் பெற வைக்க முயற்சி
ஆனால் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளவர்கள் அதனை நிரந்தர தடையுத்தரவு என எண்ணிக் கொண்டு செயற்படுகின்றனர்.
அமைச்சுப்பதவியில் உள்ள மோகத்தினால், தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெறச் செய்வதற்கு முயற்சிக்கின்றனர்.

அதன் காரணமாகவே தற்போது கட்சி யாப்பை மாற்ற வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
அதுமாத்திரமின்றி யாப்பிற்கு முரணாக அரசியல் குழு கூட்டத்தையும் கூட்டி பதில் தலைவரையும் தெரிவு செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் செயலாளர் அறிவித்திருக்கின்றார். எனவே சட்ட ரீதியாக நாம் அவர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan