வெளிநாடுகளுக்கு செல்வோர் தொடர்பில் சாதனை படைத்த இலங்கை
2022இல் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தையும் தாண்டியுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஒரு வருடத்தில் மிகக் கூடுதலான இலங்கையர்கள் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற முதல் சந்தர்ப்பம் இந்த வருடத்தில் பதிவாகி உள்ளது.
சர்வதேச குடியேற்ற தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் மனுஷ நாணக்கார இந்தத் தகவலை வெளியிட்டார்.
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பல உலக நாடுகள் தமது நாட்டுப் பிரஜைகளை வெளிநாடுகக்கு வேலைவாய்புக்காக அனுப்புவதன் மூலம் அந்த நெருக்கடியின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இலங்கையும் பயிற்சி பெற்ற மற்றும் திறன் விருத்தி கொண்ட ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது.
இருப்பினும் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார்;.
அவ்வாறு செல்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து அதன் பின்னர் வெளிநாடு
செல்பவர்களுக்கு தொழில் பாதுகாப்பும் ஏனைய சலுகைகளும் கிடைக்கும் என்று
அமைச்சர் தெரிவித்தார்.