இஸ்ரேல் தொழில்வாய்ப்பைப் பெற்று இன்னுமொரு குழு பயணம்
இஸ்ரேலில் தாதியர் வேலை வாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவிற்கு நேற்று (23) விமான டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் அது தொடர்பான வைபவம் நேற்று மாலை இடம்பெற்றது.
இக்குழுவினர் இஸ்ரேலில் வேலை வாய்ப்பு பெற்ற 6வது பணியாளர் குழுவாகும் இவர்கள் வரும் 26ம் திகதி இஸ்ரேல் செல்ல உள்ளனர்.
பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இஸ்ரேலில் தாதியர் வேலை வாய்ப்புகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், இஸ்ரேலில் வேலை பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு வெளிநபருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri