இலங்கையில் கால் பதிக்கும் சீனாவின் ஆடைத்தொழில்துறை
இலங்கையின் ஆடைத்தொழில்துறையில் சீனாவின் முதலீடுகள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஆடைத்தொழில்துறை முன்னணி உறுப்பினர்களின் இலங்கை பயணத்தை அடுத்தே இந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய ஆடைத்தொழில்துறை சங்க( CNGA) உறுப்பினர்கள் 30 பேர் இலங்கையில் விஜயம் மேற்கொண்டு முதலீடுகள் குறித்த விடயங்களை ஆராய்ந்துள்ளனர்.
ஆக்கபூர்வமான உரையாடல்கள்
1,400 க்கும் மேற்பட்ட முக்கிய உறுப்பினர்களைக் கொண்ட CNGA அமைப்பு, சீனாவின் முன்னணி தொழில்துறை சங்கமாகும்.
இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், இந்த சங்கத்தின் பிரதிநிதிகள், நுண்ணறிவுமிக்க தொழிற்சாலைகள் மற்றும் முக்கிய அரசாங்க நிறுவனங்களுடனான ஆக்கபூர்வமான உரையாடல்களில் ஈடுபட்டனர்.
அத்துடன் இலங்கையில் உள்ள 12 முன்னணி ஆடை நிறுவனங்களுடன் அவர்கள் நேரடியாக சந்திப்புக்களையும் கள விஜயங்களையும் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 மணி நேரம் முன்

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை News Lankasri
