எரிபொருள் நெருக்கடியால் பெரும்போக பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலை: விவசாயிகள் விசனம் (Photos)
பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் பெறுப்போக பயிர்ச்செய்கைக்கான நிலத்தினை பயன்படுத்துவதற்கான எரிபொருள் கிடைக்கப்பெறாமல் விவசாயிகள் பெரும்போக பயிர்ச் செய்கை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் சிறுபோக பயிர்ச்செய்கைகள் முடியும் நிலையில் பொரும்போக பயிர்ச்செய்கக்காக நிலத்தினை பயன்படுத்துவதற்கான எரிபொருள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் பல விவசாயிகள் தமது பெரும்போக பயிர்ச் செய்கையில் மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு
இதன் காரணமாக சிலர் தமது சொந்த மாடுகளை பயன்படுத்தி நிலத்தினை விவசாயச் செய்கைக்கு பண்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது சிலரே தமது கால்நடைகளை பயன்படுத்தி நிலத்தை பண்படுத்தி வருகின்றனர்.
இயந்திர வாழ்கையை நம்பி ஏமாற்றம் அடைந்ததே மிகுதி எனவும் முன்னையகாலம் போன்று அனைவரும் வீட்டுக்கு ஒரு சோடி மாட்டை வளர்த்தால் மட்டுமே விவசாயம் மேற்கொள்ள முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு பற்றாக்குறை
தற்பொழுது நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு விவசாயிகள் ஆகிய எமக்கு உரிய நேரத்தில் எரிபொருள் மற்றும் யூரியா உரத்தினை தந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், விவசாயிகள் ஆகிய எம்மாலும் உதவ முடியும் எனவும் இந்நிலை தொடருமாயின் ஒருவேளை உணவுக்கே வழியின்றி போய்விடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.