அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு: மேலும் அதிகரிக்கும் என அச்சம்
இலங்கையில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள இயற்கை பேரிடால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் 123 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மலையக பகுதிகளில் அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இயற்கை பேரழிவு
கண்டி மாவட்டத்தில் மட்டும் 50இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது். அழகிய மலையக பிரதேசங்கள் இயற்கை பேரழிவால் உருக்குலைந்து போயுள்ளது.

மலையக மக்கள் தங்கள் உறவுகளை தொலைத்த நிலையில் பெரும் துன்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை வடக்கு கிழக்கிலும் பேரழிவை ஏற்படுத்திய புயலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர்.
தித்வா புயல்
இலங்கையில் 2016 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்ட பெரும் இயற்கை பேரழிவு இதுவென அனர்த்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய தித்வா புயல் இன்று நண்பகல் தமிழகத்தை நோக்கி நகரும் என வளிமணடவியல் திணக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri