ஒரே நாளில் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த உற்ற நண்பர்கள்
மாத்தறையில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி உற்ற நண்பர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வெள்ளத்தில் கம்புருபிட்டிய அக்குரகொட பிரதேசத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
20 வயதுடைய தரிந்து சம்பத் மற்றும் 17 வயதுடைய நவிந்து ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தான நிகழ்வு
குறித்த இருவரும் சிறுவயதில் இருந்தே உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டாம் திகதி, தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்ய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய, அங்கு வசிப்பவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் போது, மாலை, 3 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இருவரும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரது உடல்களும் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



