ரணிலின் கால்களை தொட்டு வணங்கத் தயார்! பகிரங்கமாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்-செய்திகளின் தொகுப்பு
கடற்தொழிலுக்கு எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் மானியம் வழங்கினால் அதிபர் ரணிலின் பாதம் பணிந்து வணங்குவோம் என ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதராச்சி தெரிவித்துள்ளார்.
கடற்தொழில் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழில் அமைச்சு குறித்து பேசும் போது ஏமாற்றமும் வேதனையும் ஏற்படுவதாகவும் தற்போது கடற்தொழில் அழிக்கப்பட்டு கடற்தொழிலாளர்கள் அநாதைகளாகி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கடற்தொழிலின் வீழ்ச்சிக்கு எரிபொருள் பிரச்சினையே பிரதான காரணியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,