உடைக்கப்பட்ட இந்திய முற்றுகை! மயிரிழையில் தப்பிச் சென்ற தலைவர் பிரபாகரன்(Video)
அன்று அதிகாலை 4 மணி இருக்கும் குண்டு வீச்சி விமானங்கள் குண்டு மழை பொழிய, கடற்படை கப்பல்கள் பீரங்கி தாக்குதல்களை நடத்த, இந்திய படை சிப்பாய்கள் ஆயுதங்களை தாங்கியபடி முன்னேற தொடங்கினார்கள்.
முன்னேறிய இந்திய படை வீரர்கள் மனங்களில் வெற்றி பெருமிதம். ஈழ மண்ணில் இதுவரை தாங்கள் பெற்ற அவமானங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு கிடைக்க போகின்றது என்ற மகிழ்ச்சி.
விடுதலைப் புலிகளின் தலைவரை எவ்வாறு கைது செய்வது? எப்படி அவரை அடிப்பது? துன்புறுத்துவது? என்ற பல கற்பனைகள் அவர்கள் மனங்களில் இருந்தன.
ஆனால் விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து எதிர்பாராத பதிலடிகளை எதிர்நோக்கும் போது தான் அவர்கள் தாம் அவசரப்பட்டுவிட்டதை உணர ஆரம்பித்தார்கள்.
மரங்களின் மேல்,வேர்களின் அடியில், பூமிக்கு கீழ் என எங்கிருந்து துப்பாக்கி குண்டுகள் தம்மை நோக்கி வருகின்றது என தெரியாமல் இந்திய படைகள் தடுமாறிக்கொண்டிருந்தனர்.
இப்படியான ஓர் தாக்குதல் முயற்சியில் இந்திய முற்றுகை எவ்வாறு உடைக்கப்பட்டது. அதிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பிச் சென்ற தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
