இறுதிக் கட்ட யுத்தத்தில் இரசாயனக் குண்டுகள்! 3 இலட்சம் தமிழர்களை பணயக் கைதிகளாக்கிய விடுதலைப் புலிகள் - காரசாரமான விவாதம்
இறுதி கட்ட யுத்தத்தின் போது இரசாயன குண்டு தாக்குதல் பிரயோகிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இரசாயன குண்டு தாக்குதல் பிரயோகிக்கப்படவில்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடும் கருத்து அடிப்படையற்றது.யுத்தத்தில் இரசாயன குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடுவது அடிப்படையற்றது.

இறுதி கட்ட யுத்தத்தின் போது இரசாயன குண்டுத்தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது பல அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. படையினரால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
295,000 தமிழர்களை பாதுகாத்தே இறுதிகட்ட யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.விடுதலை புலிகள் அமைப்பு 3 இலட்சம் தமிழர்களை பணய கைதிகளாக வைத்திருந்த போது இவர்கள் எங்கு சென்றார்கள். இன அழிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு இவர்கள் தான் தொடர்ந்து முரண்பாடுகளை ஏற்படுத்துகிறார்கள் என குறிப்பிட்டார்.
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam