அணுவாயுத போட்டி: ஆபத்தை எதிர்நோக்கும் இலங்கை! வெளிவந்துள்ள கடிதம்
இந்து சமுத்திரத்தில் அணுவாயுத போட்டி காரணமாக சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை பெரிய பாதுகாப்பு ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரத்திற்குள் அடிக்கடி அணுவாயுத நீர்மூழ்கி கப்பல்கள் பிரவேசிப்பது, அணுவாயுத போட்டி உச்சமடைந்திருப்பது, சில ஏகாதிபத்திவாதிகள் குழுக்களாக பிரிந்து, சிறிய நாடுகளை சார்பான தீர்மானங்களை எடுக்குமாறு அழுத்தம் கொடுப்பது ஆகிய காரணங்களால், இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை பெரிய பாதுகதப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷோங்ஹொங் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில் சீனத் தூதுவர் இதனை கூறியுள்ளார். இது பிராந்தியத்தின் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை பாரதூரமான பலவீனத்திற்கு உள்ளாகும்.
ஆயுத போட்டியை வேகப்படுத்தும், சர்வதேச அணுவாயுத பாவனையை குறைக்கும் முயற்சியை சீர்குலைக்கும் அமெரிக்க தலைமையிலான நாடுகளில் இந்த கெடுதியான நடத்தை குறித்து சர்வதேச சமூகம் குறிப்பாக பிராந்திய நாடு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதுடன் திடமாக அதனை எதிர்க்க வேண்டும் எனவும் சீனத் தூதுவரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
உலகை அணுவாயுத பாவனையில் இருந்து விடுவிப்பதற்காக அணுவாயுதங்களை தடை செய்து, அவற்றை முற்றாக அழிக்க வேண்டும் என சீன நம்புகிறது. சீனா எப்போதும் தனது அணுவாயுத பலத்தை தேசிய பாதுகாப்புக்கு தேவையான மட்டத்தில் வைத்திருந்தது எனவும் அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri