இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் : ஜனாதிபதி ரணில் உறுதி
நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)தெரிவித்துள்ளார்.
நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் அரசியல் பிரதிநிதிகளுடன் நேற்று (18.04.2024) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் திருப்புமுனை
மேலும் தெரிவிக்கையில், “நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சிலர் விமர்சித்துள்ள நிலையில், இந்த அபிவிருத்தித் திட்டத்திற்கு அனைவரினதும் ஆதரவு கிடைத்தால் திட்டங்களை நாட்டின் பொருளாதாரத்தில் திருப்புமுனையாக மாற்றிக் கொள்ள முடியும்.
எனினும், பழமையான அரசியலில் ஈடுபட்டு நாட்டை அபிவிருத்திக்கு இ்ட்டுச் செல்ல முடியாது. நாட்டுக்கு தேவையான முதலீடுகளை ஈர்த்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் இணக்கமாக செயற்பட வேண்டும்.
அரசாங்கத்தின் சரியான பொருளாதார வேலைத்திட்டத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையினால் இந்த வருடம் மக்கள் சிங்கள, தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்கள்.
பிராந்திய இளைஞர் நிலையங்கள்
இன்று சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வோடு, மக்களின் வருமான மூலங்களும் அதிகரித்துள்ள நிலையில், இந்த பயன் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
மேலும், இளைஞர் சமூகத்தை வலுவூட்டுவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் பிராந்திய இளைஞர் நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அப்பிரதேச இளைஞர் மையங்கள் மூலம் இளம் தொழில் முனைவோரை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும்” ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற வேட்பாளர் அசோக ஹேரத், “அடுத்த 02 வருடங்களில் நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை மேற்கொண்டு 10 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேவையான ஆதரவை வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
