பாகிஸ்தானில் இலங்கை போன்ற சூழல் உருவாக வாய்ப்புண்டு: இம்ரான் கான் எச்சரிக்கை
அரசாங்கம் சரியான நேரத்தில் தேர்தலை நடத்தவில்லை என்றால், பாகிஸ்தானில் இலங்கை போன்ற சூழல்கள் உருவாகலாம் என பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாபின் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று (19.01.2023) போல் நியூஸ் செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை இம்ரான் கான் பிபிசிக்கு அளித்த நேர்காணலில் கருத்து தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மூலம் மட்டுமே சமாளிக்க முடியும்.
பொருளாதார நெருக்கடி
ஆளும் அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடித்தால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும்.
விரைவில் தேர்தல் நடத்தப்படாவிட்டால், மக்களிடையே சென்று பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்துவோம்.
தகுதி நீக்கம்
தம்மை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு நாளும் தனக்கு எதிராக அரசாங்கத்தரப்பினர் புதிய குறிப்புகளை பதிவு செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டால், கட்சியை நடத்துவது யார் என கேள்வியெழுப்பிய போது, அதுபோன்ற சூழல் ஏற்பட்டால், தாம் தகுந்த முடிவெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 19 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
