இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து அணியின் புதிய வீரர்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இங்கிலாந்து அணியில் புதிய வீரர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் எஞ்சிய 2 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் (Josh Hull) அழைக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டி
இரு நாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்ட Mark Wood, எஞ்சிய 2 போட்டிகளில் விளையாட முடியாது என மருத்துவ பரிந்துரைகளை பெற்றுள்ளார்.

இதனையடுத்து இங்கிலாந்து அணிக்கு ஜோஷ் ஹல்(Josh Hull) அழைக்கப்பட்டுள்ளார்.
Leicestershire பிராந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜோஷ் ஹல் 20 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
பயிற்சி போட்டி
இலங்கை அணி இங்கிலாந்து தொடரை ஆரம்பிப்பதற்கு முன்னர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஒரேயொரு பயிற்சி போட்டியில் ஜோஷ் ஹல் விளையாடியுள்ளார்.

அந்த போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
மேலும் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடாத ஜோஷ் ஹல் இதுவரை 9 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri