மின்சார சபையினால் நட்டம் என்பது மிக பெரிய பொய்! சம்பிக்க ரணவக்க சாடல்
இலங்கை மின்சார சபை தற்போதைக்கு இலாபத்தில் இயங்கும் நிலையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கும் தேவை இல்லையென்று சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், 43 வது படையணியின் தலைவருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அண்மையில் மின் கட்டணத்தை அதிகரித்த பின்பு கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் மின்சார சபை 28 கோடி ரூபாவுக்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளது.
மின்சார சபை நட்டம்
அவ்வாறான நிலையில் மின்சார சபை நட்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்படுவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போன்று இலங்கை மின்சார சபையை 18 நிறுவனங்களாக பிரித்து அதன் கீழ் இன்னும் பல நிறுவனங்களை நடத்திச் செல்லும் தீர்மானமொன்றை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
அவ்வாறான நிலையில் மின் உற்பத்தி செய்வதற்கான நீர்த்தேக்கங்களை குறித்த நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் ஒப்படைப்பதன் மூலம் இருந்து குடிநீர் மற்றும் விவசாய நீர்ப்பாசனத்தைப் பெற்றுக் கொள்ளும் மக்களுக்கு பெரும் சிக்கல்கள் ஏற்படும்.
நீர் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து குறைந்த செலவில் பெறப்படும் மின்சாரம் ஏழை மக்களுடைய பயன்பாட்டுக்கு போதுமானது.
டீசல் மின் உற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரம் வீடுகளுகக்கும், வர்த்தக மற்றும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படுவதன் காரணமாக அவர்களின் மின் கட்டணத்தை அதிகரிப்பதில் தப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
