எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் இலங்கையில் ஏற்படும் மாற்றம் - ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு
எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மித்தெனியவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மீண்டு வரும் இலங்கை
மேலும் கூறுகையில், பல கட்சிகளாகப் பிரிந்து போட்டியிடுகின்றனர். வெற்றிபெற்ற பின் இணைந்து ஆட்சியமைக்கின்றனர். அவ்வாறெனின் எதற்காகப் பிரிந்து போட்டியிட வேண்டும்.
எவ்வாறு போட்டியிட்டாலும் இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கும். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் மீட்டுவருவதுடன், எதிர்வரும் காலங்களில் முழுமையாக நாட்டை நாம் மீட்டெடுப்போம்.
குறைந்த விலையில் மின்சாரம்
இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து இலங்கைக்கு பாரியதொரு தொகை கிடைக்கப் பெறும். தனியார் நிறுவனம், காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து இலங்கை மின்சார சபைக்கு விற்பனை செய்யவுள்ளது.
குறைந்த விலையில் மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் நாம் அண்மையில் கையெழுத்திட்டோம். தெற்காசிய பிராந்தியத்தில் இன்னும் 3 அல்லது 4 வருடங்களில் குறைந்த மின்கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் எனத் தாம் உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட ஆவணம்! முற்றிலுமாக நிறுத்தபட்ட இலங்கைக்கான உதவி திட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |