தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் வசூலிக்கும் நாடாக இலங்கை
தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை உள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் முதல் தர பொருளியல் நுண்ணறிவு தளமாகிய வெரிட்டே நிறுவனத்தின் இணையத்தளம் வெளியிட்ட புள்ளிவிபரங்களுக்கு அமைய இந்த தகவல் வெளியாகி உள்ளது.
தெற்காசிய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை மக்கள் சராசரியாக 2.5 இருந்து 3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணத்தை செலுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின் கட்டணம்
2024 இன் ஆரம்பத்தில் உள்ளுர் மின்சார பாவனையாளர்கள் 100,200 மற்றும் 300 அலகுகளை நுகரும் பொழுது மின்சார கட்டணம் எவ்வாறு அறவிடப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் கணக்கீட்டின்படி வழங்குனரின் உற்பத்தி செலவு மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் மேலதிகமாக அமுல்படுத்தபட்டுள்ள சமூக பாதுகாப்பு வரி உட்படுத்தப்பட வில்லை.
இலங்கைக்கு அடுத்து தெற்காசியாவின் உயர் மின்கட்டணம் வசூலிக்கும் நாடாக பாகிஸ்தான் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.