இலங்கையின் பொருளாதாரத்தில் வருடத்தின் இறுதி காலாண்டில் ஏற்படவுள்ள மாற்றம்
வருடத்தின் இறுதி காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வலுவடையுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் மறை 3.0ஆக இருக்குமென சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. எவ்வாறாயினும் மத்திய வங்கியின் கணிப்பீட்டின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் மறை 2 - 3 இற்கு இடையில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உள்ளூர் உற்பத்திக்கான பங்களிப்பை அதிகரிக்க அனைவரும் உறுதியுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |