இலங்கையின் வளர்ச்சி நிலை குறித்து மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட சர்வதேச நிபுணர்
இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான நிலைமைக்கு செல்லும் சாதகமான அறிகுறிகளை காட்டுவதாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டில் 3.8 சதவீதமாக சுருங்கியுள்ள இலங்கையின் பொருளாதாரம், அடுத்தாண்டு 1.7 சதவீதத்தால் வளர்ச்சியடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதரம்
19 மாதங்களுக்கு முன்பு 70 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்தை எட்டியுள்ளதாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போது நாட்டில் வட்டி விகிதம் குறைந்துள்ளது. வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துள்ள சுற்றுலா மற்றும் பணப்பரிமாற்றங்கள் ஆகியவற்றுடன் மேலும் வலுவடையும்.
அந்நியச் செலாவணி
இது பயன்படுத்தக்கூடிய அதிகாரப்பூர்வ இருப்புக்களை உருவாக்க உதவும். அந்நியச் செலாவணி வரவின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இது இந்த ஆண்டின் முதல் பாதியில் மதிப்பிடப்பட்ட நிலுவைத் தொகைக்கு பங்களித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக 81 சதவீதம் மதிப்பிழந்த இலங்கை ரூபா, கடந்த ஜனவரி முதல் ஒகஸ்ட் வரை 11 சதவீதத்தால் உயர்ந்துள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்தும் தற்போது தெளிவு ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக மேம்பட்ட வர்த்தக சமநிலை உள்ளது. அதே நேரத்தில், வெளிநாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. சமகால சர்வதேச நெருக்கடியே இதற்க காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்