இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்
இலங்கை தனது பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை கால அட்டவணைக்குள் முடிக்க எதிர்பார்த்துள்ள நிலையில், இரண்டாவது தவணை நிதியுதவியை பெறுவதற்கான பாதையில் உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இதனை தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சுப்ரமணியன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்
திட்டமிட்டபடி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நிறைவு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை பெறும் பாதையில் இலங்கை பிரவேசித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இரண்டாவது தவணையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையிடமிருந்து அனுமதி பெறப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.