இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி - முடங்கப் போகும் சுற்றுலாத்துறை
கழிப்பறைக்கு பயன்படுத்தப்படும் Tissue உட்பட பல இறக்குமதி பொருட்களின் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் கழிவறை திசுக்கள் உட்பட பல சுகாதாரப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இறக்குமதி தடை
விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக குறித்த பொருட்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்ய முடியாது எனவும், இதனால் அரசாங்க வைத்தியசாலைகள், தனியார் வைத்தியசாலைகள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றின் சுகாதார சேவைகளை பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், இந்த இறக்குமதி தடை அமுல்படுத்தப்பட்டமையினால், எதிர்காலத்தில் சுற்றுலாத் துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பாதிக்கப்படும் சுற்றுலாத்துறை
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சுகாதாரத்திற்குத் தேவையான கழிவறை Tissue மற்றும் ஏனைய சுகாதாரப் பொருட்களை உரிய முறையில் வழங்க முடியாத சூழ்நிலையில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்களா என்ற பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய கொரோனா தொற்றுநோய் சூழ்நிலையில் இலங்கை மக்கள் தங்கள் தனிப்பட்ட சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் குறித்த தயாரிப்புகள் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
அரசாங்கம் விதித்துள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளினால், நாட்டின் ஆரோக்கியம் மற்றும் அது தொடர்பான பொருட்களில் ஈடுபட்டுள்ள பெருமளவிலானவர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.