தென்னிலங்கையில் பேசும்பொருளாக மாறிய மகிந்த - தொடரும் குழப்ப நிலை
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்ததாக சில ஊடகங்கள் நேற்று இரவு செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் பின்னர் அந்த செய்தியை குறித்த ஊடகங்கள் நீக்கியது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய செயற்பாட்டாளர்களும் பதவி விலகல் தொடர்பான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர்.
எப்படியிருப்பினும் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல், நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டை ஆளத் தேவையான அனைத்து அதிகாரங்களும் தனக்கு வழங்கப்பட்டதை மகிந்த ராஜபக்ஷ தனது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
நாட்டில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்திய இரசாயன உரங்களை தடை செய்தல் போன்ற தீர்மானங்களை ஜனாதிபதி தனது விருப்பத்திற்கேற்ப எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் அமைக்கப்படுமாயின் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் முழு அமைச்சரவையையும் கலைக்குமாறு பிரதமர், ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழு அமைச்சரவையையும் கலைக்க பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும், இறுதித் தீர்மானத்தை பிரதமரே எடுப்பார் என்றும் அண்மையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் நாலக கொடஹேவா நேற்று தெரிவித்தார்.
எப்படியிருப்பினும் பிரதமருக்கு விசுவாசமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அலரி மாளிகையில் ஒன்று கூடி பிரதமர் பதவி விலகக் கூடாது என தெரிவித்திருந்தனர். அவர்கள் இன்று அலரி மாளிகையில் பெருந்திரளான மக்களை ஒன்றுதிரட்டவும் திட்டமிட்டுள்ளனர். அதற்கமைய, பிரதமர் பதவி விலக மாட்டார் என கூறப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 12 நிமிடங்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
