பொது மக்களை கொடூரமாக தாக்கிய அதிரடி படையினர் - சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வீடியோ
நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை அதிரடி படையினர் மிகவும் கொடூரமான தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான காணொளி ஒன்று வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு நாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் மிக மோசமான முறையில் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் சிறு பிள்ளைகள் உட்பட கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
பல்கலைக்கழகங்க மாணவர்கள் மீது பொலிஸார் நேற்று கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், மாணவர்களுக்காக மக்கள் கொண்டு வந்த உணவுகள் மீது நீர்த்தாரை வீசப்பட்டது.
அத்துடன் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதற்காக பொலிஸார் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 17 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
ஆறு மாதங்களில் 40,000 புலம்பெயர்ந்தோர்: சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு News Lankasri