கோட்டாபயவை நெருக்கடிக்கு உள்ளாக்கும் திருத்தம்: விடாப்பிடியில் மக்களும் சகாக்களும் (Video)
நாட்டில் தொடர்ந்து அரசியல் நெருக்கடிகள் வலுவடைந்து கொண்டே செல்கின்றன. மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் மக்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.
தமது தொழில் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்ல எரிபொருளை பெற்றுத்தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் ஆரம்பித்ததும் அரசாங்கத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 40 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியின் பக்கம் சென்று அமர்ந்து விட்டனர்.
தாம் எதிர்க்கட்சியுடன் சேரவில்லை. எனினும் எதிர்க்கட்சியின் பக்கம் சுயாதீனமாக அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதாக அவர்கள் அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கமானது இரண்டு அணுகுமுறைகள் ஊடாக இந்த பிரச்சினைகளை சமநிலைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
அதாவது முதலாவதாக 19 பேரை கொண்ட ஒரு அமைச்சரவை நியமிக்கப்பட்டு இருக்கின்றது. மூத்த அரசியல்வாதிகள் மிகவும் குறைவாகவும் இளம் பிரதிநிதிகள் மிக அதிகமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ள வகையில் புதிய அமைச்சரவை நாட்டில் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பான விரிவான தகவல்களை சுமந்து வருகின்றது இந்த காணொளி,



