நாட்டில் சடுதியாக அதிகரித்த கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்
நாட்டில் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
2022 ஜனவரி முதல் ஜூலை வரையில் மட்டும் 224,915 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளதாக பணியகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
இது கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும் எண்ணிக்கை ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் எண்ணிக்கை
செப்டெம்பர் 30 அன்று இந்த எண்ணிக்கை மேலும் 233,756 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை குடிவரவுத் திணைக்களம் தற்போது மாதமொன்றுக்கு சராசரியாக 78,000 கடவுச்சீட்டுகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 5,90,260 ஆகும்.





சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
