பொருளாதாரக் குற்றவாளிகளை கண்டறிய ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களை அடையாளம் காண விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த திட்டம் இந்த வாரம், இலங்கையின் அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பிரிவினர் இந்த யோசனையை விரும்பவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
சுயாதீனமான விசாரணை
எனினும் பொதுமக்கள் அத்தகைய நடவடிக்கையை வரவேற்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்தநிலையில் நிச்சயமாக, அத்தகைய விசாரணை தெளிவாக சுயாதீனமாக இருக்க வேண்டும் என்று கொழும்பு ஊடகங்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்த விசாரணைகளின்போது குற்றவாளிகளை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல்,
முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரங்களும், குறித்த குழுவுக்கே வழங்க
வேண்டும் என்று கொழும்பு ஊடகங்கள் கோரியுள்ளன.