இலங்கை மக்களுக்காக புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெகு விரைவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.
முதலில் மக்களுக்கு அத்தியாவசியமான நிவாரணங்களை வழங்கி, மக்கள் வாழ கூடிய சூழ்நிலையை உருவாக்கிய பின்னரே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிவாரண வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே பல வெளிநாடுகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
2015ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர், மக்களுக்கு பாரிய நிவாரணங்களை வழங்கும் வரவு செலவுத் திட்டத்தை ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் சமர்ப்பித்திருந்தது.
அதேபோன்று தற்போதைய நெருக்கடியான நிலையிலும் நிவாரணங்கள் அடங்கிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அமைச்சரவையில் நிதியமைச்சராக செயற்பட்ட அலி சப்ரியும் புதிய வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
