அமெரிக்காவின் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ள சமந்தா பவரின் வருகை
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின்(USAID) நிர்வாகி சமந்தா பவர் உள்ளிட்ட குழுவினருக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கைக்கான உதவிகள்
உரத்திற்கான உதவித் தொகையாக 40 மில்லியன் டொலர் மற்றும் மனிதாபிமான உதவியாக 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது.
Thank you @USAIDPower for an inspiring visit. From announcing $40M in fertilizer asst & $20M in humanitarian aid to our meetings w @RW_UNP, civil society, opposition leaders & aid recipients, your visit demonstrated US commitment to an inclusive, stable future for all SL. pic.twitter.com/3ekCKS6Ysv
— Ambassador Julie Chung (@USAmbSL) September 13, 2022
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிவில் சமூகத்தினர் மற்றும் எதிர்கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்கள் வரை உங்கள் வருகையானது அனைத்து இலங்கையையும் உள்ளடக்கிய நிலையான எதிர்காலத்திற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது எனவும் தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.


