கோட்டாபயவை காப்பாற்றும் இறுதி முயற்சி! களத்தில் குதித்த முக்கிய சக்தி (VIDEO)
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சியினரும்,பொது மக்களும் இணைந்து போராடி வரும் நிலையில்,ராஜபக்சர்களை மகா சங்கத்தினர் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என பிரித்தானியாவினை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலின் நகர்வு தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
இந்தியாவிற்கு எதிராக இலங்கையில் தனது ஆதிக்கத்தினை நிலை நாட்ட அமெரிக்க முயற்சித்து வரும் நிலையில்,இலங்கையில் இடம்பெறும் போராட்டங்களின் பின்னால் அமெரிக்கா செயற்படுகின்றது.
கடந்த ஆறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு இல்லாத ஒரு சிறப்பு அதிகாரம் கோட்டாபய ராஜபக்சவிற்கு காணப்பட்டுள்ளது.
அதற்காகவே மகா சங்கத்தினர் பாதுகாத்து வருகின்றனர்.
அதாவது,கொழும்பிலும்,ராஜபக்சர்களின் சொந்த ஊர்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்,ராஜபக்சர்களை காப்பாற்றும் முயற்சியில் பௌத்த மகா சங்கத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.