இரகசியமாக ஆலயத்திற்கு சென்று நேர்த்திக்கடன் வைத்த ஷிரந்தி ராஜபக்ஷ
அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மாவனல்லை அளுத்நுவர தேவாலயத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 30ஆம் திகதி காலை 7.30 மணியளவில் பாதுகாவலர்களுடன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கோவில் வளாகத்திற்கு சென்றுள்ளார்.
பிரதமரின் மனைவி அளுத்நுவர தேவாலயத்திற்கு சென்று நேர்த்திக்கடன் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அது தொடர்பில் தேவாலயத்தில் பூஜை நடத்துபவர் வினவியபோது, அது தொடர்பான தகவலை வெளியிட மறுத்துள்ளார்.
அன்றைய தினம் அளுத்நுவர தேவாலயத்திற்கு வருவதற்கு முன்னதாக பிரதமரின் மனைவி அதிகாலையில் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கும் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகக் குறுகிய காலம் அளுத்நுவர தேவாலயத்தில் இருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, அங்கு நடைபெற்ற பூஜை வழிப்பாடுகளின் பின்னர் கொழும்பு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

