பிரதமர் பதவியில் திடீர் தீர்மானம் - பிரதமர் செயலகம் வெளியிட்ட அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை காட்ட எந்தவொரு கட்சியும் தயாராக இருந்தால், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுமாயின் ஜனாதிபதி கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்து புதிய பிரதமரை அறிவிக்க வேண்டும் என்பதே மகிந்தவின் கருத்தாக இருப்பதாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அப்படி இல்லாமல் பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவை கலைக்கப்பட்டு குழப்பமான சூழ்நிலை உருவாகலாம் எனவும் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு நிலைமையானது தற்போதைய பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவ்வாறான செயல் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் தற்போதைய வேலைத்திட்டத்தை மோசமாக பாதிக்கும் என்றும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
You My Like This Video