தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள மகா நாயக்கர்கள்
எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல்வாதிகளும் தம்மைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என மல்வத்து பீடம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை மல்வத்து பீடத்தின் மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
மாநாயக்க தேரரின் சம்மதத்துடன் நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற இடைக்கால அரசாங்கம் அமைப்பது உள்ளிட்ட ஆறு யோசனைகள் அடங்கிய கடிதம் ஒன்றை மகா நாயக்கர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பியிருந்தனர்.
குறித்த கடிதத்திற்கு இதுவரையில் எவரும் சாதகமான பதிலை வழங்காத காரணத்தினால் மகா நாயக்க தேரர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் மல்வத்து மாநாயக்க தேரரைச் சந்திக்கச் சென்றபோது, அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அண்மையில் மல்வத்து மாநாயக்க தேரரை சந்திக்கச் சென்ற போது, அவர்களுக்கும் நேரம் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஆட்சியாளர்களின் அரசியல் செயற்பாடுகளில் மகா நாயக்கர்களின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
May you like this Video