எம்மை கேட்பதற்கு யாரும் இல்லை! கொழும்பில் மக்களின் நிலைமை (Video)
வறுமையைப் போல் துன்பமானது இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை.
நம் நாட்டில் நாளுக்கு நாள் ஒவ்வொரு உணவு பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரிக்கப்பட்ட நிலையிலே உள்ளது.
இதனால் அன்றாடம் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட வசதியற்ற நிலையில் மக்கள் அனைவருமே திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
மாதாந்த வருமானம் பெறும் அரச ஊழியர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் என அனைவருமே இன்று பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கூலிவேலைக்கு செல்லும் வறுமை கோட்டிற்கு உட்பட்டவர்களின் வாழ்வாதாரம் என்பது மிகவும் கேள்விக்குறியான ஒன்றாகும். 67 வயதில் தனது வறுமையோடு குடும்பத்திற்காக போராடும் முதியவர் ஒருவர் கண்ணீருடன் தனது கவலையை எமது செய்தி சேவையுடன் பரிமாறிகொள்கின்றார்.
மரக்கறிகள் உட்பட அனைத்து பொருட்களினதும் விலை அதிகரிப்பு வாழ்வதற்கு வழியின்றி இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.