இலங்கையின் தற்போதைய நிலை! முக்கிய தகவலை வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்
இம்மாதத்தில் சீனாவிடமிருந்து நிதி உத்தரவாதம் கிடைத்தால், ஜனவரியில் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைக்கும் என நம்பலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமை குறித்து விளக்கமளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான நடவடிக்கை, எங்கள் இருதரப்பு கடன் வழங்குனர்களும் நிதி உத்தரவாதம் வழங்க சம்மதிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே செய்து வருகின்றோம்.
நாங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று நினைக்கிறேன். பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா இங்கு எங்களுக்கு ஆதரவளிக்கின்றன.
ஜனாதிபதி கூறியது போல் சீனாவுடனான பேச்சுவார்த்தை சற்று தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டது.
முன்னதாக நவம்பரில் நிதிச் சான்றிதழைப் பெறுவதே எங்கள் இலக்காக இருந்தது. எனினும் டிசம்பரில் நாணய நிதியத்தின் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலைப் பெறுவதை இலக்காகக் கொண்டிருந்தோம். எனினும் இந்த நேரத்தில் அது நடக்காது. சீனாவுடனான சிறிது காலதாமதமே அதற்கு காரணமாகும்.
இப்போது நாணய நிதியத்தின் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலை வரும் ஜனவரியில் பெறுவதில் கவனம் செலுத்துகிறோம்.
இந்த மாதத்திற்குள் சீனாவிடம் இருந்து நிதி உத்தரவாதம் கிடைத்தால், எங்களால் அதைச் செய்ய முடியும்.
இந்தச் சூழ்நிலையை நம்மால் சமாளிக்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.