தமிழர் பகுதியில் பலரை வியப்பில் ஆழ்த்திய ஆசிரியரின் நெகிழ்ச்சியான செயல்! குவியும் வாழ்த்துக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கல்வி நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்களின் பொருளாதார நெருக்கடிக்கு உதவிய ஆசிரியரின் நெகிழ்ச்சியான செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த பாடசாலை ஆசிரியரான ஜீவனேஸ்வரன் ஜீவன் என்பவர் ஒரு வார காலமாக பாடசாலைக்கு சமூகமளிக்காத தமது வகுப்பு மாணவர்களின் வீடு தேடிச்சென்று காரணத்தை வினவிய போது மாணவரொருவர் தலைமுடியினை வெட்ட பணமில்லாத காரணத்தினால் தன்னால் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியவில்லையென தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்கக்கூடாதென எண்ணிய ஆசிரியர் தமது கடமைக்கு அப்பால், சிகை ஒப்பனையாளராக மாறி மாணவர்களுக்கு தலைமுடியினை வெட்டி ஆற்றிய மனித நேயப்பணிக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.