இலங்கையில் சராசரி குடும்பத்திற்கு மாதம் 110,000 ரூபாய் தேவை: ஆய்வு தகவல்-செய்திகளின் தொகுப்பு
பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 110,000 ஆக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் ஒரு சராசரி குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு 63,000 ஆக இருந்த நிலையில் அது இன்று 47,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது என பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
2019 இல் 14,500 ஆக இருந்த வறுமையில் வாடும் குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு, பணவீக்கம் காரணமாக 11,000 ஆயிரத்தால் அதிகரித்து தற்போது 25,500 ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் காரணமாக, 2019 ஆம் ஆண்டில் 198,000 ஆக இருந்த இலங்கையில் அதிக வருமானம் ஈட்டும் குடும்பத்தின் மாதாந்தச் செலவுகள் இன்று 345,000 ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் 48,000 ஆக இருந்த நடுத்தர வருமானம் பெறும் குடும்பத்தின் மாதச் செலவு பணவீக்கம் காரணமாக 35,000 ரூபாயால் மேலும் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,