பொருளாதார நிலவரத்தை நாட்டு மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்! சஜித்

Sajith Premadasa Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Rakesh May 25, 2026 10:07 AM GMT
Report

நாட்டில் தற்சமயம் நிலவி வரும் உண்மையான பொருளாதார நிலவரங்கள், டொலர் கையிருப்பின் எதார்த்தம் மற்றும் வருங்காலக் கடன் சவால்கள் குறித்து நாட்டின் 220 இலட்சம் குடிமக்களும் விழிப்போடு சரியான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

குளியாப்பிட்டிய நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாராட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் நாட்டின் நிதி நிலைவரம் மற்றும் அரச சேவை குறித்து மேற்கண்டவாறு கூறினார்.

பொருளியல் கோட்பாடுகளின்படி ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது, குறைந்தபட்சம் மூன்று மாத கால இறக்குமதிச் செலவுகளை ஈடுசெய்யக்கூடியதாக அமைய வேண்டும்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மக்களை பாதுகாப்பதே பிரதான இலக்கு

தற்சமயம் இலங்கையிடம் 7 பில்லியன் டொலர் கையிருப்பு இருப்பதாகக் கூறப்படும் தரவுகளின் உண்மையான நிலையைச் சஜித் பிரேமதாச பகுப்பாய்வு செய்தார்.

மேலும், “தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு மாதமும் இறக்குமதிக்காக 2 பில்லியன் டொலர் ஒதுக்கப்படுகின்றது. ஒட்டுமொத்த 7 பில்லியன் டொலர் இருப்பில், 1.2 பில்லியன் டொலர் பெறுமதியான தொகை பயன்படுத்த முடியாத 'சீன யுவான்' நாணயமாகவே முடங்கிக் காணப்படுகின்றது.

பொருளாதார நிலவரத்தை நாட்டு மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்! சஜித் | Sri Lanka Economic Crisis

இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மேலும் அதிகரித்தால், இந்த இருப்பின் தாங்குதிறன் வெகுவாகக் குறையும்.

அத்துடன், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நீடித்து அங்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால், அந்நாடுகளில் இருந்து இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டு அனுப்பீடுகள் பெருமளவில் வீழ்ச்சியடையும் 

நாட்டின் எதிர்கால நிதி நெருக்கடி குறித்து எச்சரித்த அவர், தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு 2027 மார்ச் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார். 

"அதன் பின்னர், 2028 ஆம் ஆண்டு முதல் சாதாரண மாதாந்த இறக்குமதிச் செலவுகளுக்கு மேலதிகமாக, ஆண்டுதோறும் 3 பில்லியன் முதல் 3.5 பில்லியன் டொலர் வரையான வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பின்படி திருப்பிச் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பு நாட்டுக்கு உண்டு.

பொருளாதார நிலவரத்தை நாட்டு மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்! சஜித் | Sri Lanka Economic Crisis

எனவே, வெறுமனே இருப்பைக் காட்டி ஏமாற்றாமல், ஏற்றுமதித் துறையை வலுப்படுத்தி, நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் மிகக் கூடிய அவதானத்தைச் செலுத்த வேண்டும்” என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டில் வறுமை அதிகரித்து வருவதுடன், பெரும்பாலான குடும்பங்களில் செலவுக்கு ஏற்ற வருமானம் இல்லாத நெருக்கடி நிலை காணப்படுகின்றது என்றும், இந்தச் சவாலான தருணத்தில் 220 இலட்சம் மக்களையும் பாதுகாப்பதே பிரதான இலக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்கும் உள்ளூராட்சி மன்றங்களின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் தன்னலமற்ற அர்ப்பணிப்பினை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.

தொடர் சரிவில் அமெரிக்க டொலர்கள்! அமைச்சர் வெளியிட்ட நம்பிக்கை

தொடர் சரிவில் அமெரிக்க டொலர்கள்! அமைச்சர் வெளியிட்ட நம்பிக்கை

"1971 மற்றும் 1988 - 1989 கலவரக் காலங்களிலும், 30 ஆண்டுகாலப் பயங்கரவாத யுத்த காலத்திலும் நாட்டின் மனித மற்றும் பொருளாதார வளங்கள் அழிந்தபோது, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைக் கட்டமைப்பு மூலமாக அடிமட்ட மக்களுக்குரிய சேவைகளை இந்த அதிகாரிகளே பாதுகாத்தனர்.

நாட்டின் அரச சேவையானது அரசியல் அழுத்தங்களில் இருந்து முற்றாக விடுபட்டு, வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் சுயாதீனமாக இயங்க வேண்டும். ஊழியர்களின் நியமனங்கள் மற்றும் உயர்வுகள் அரசியல் செல்வாக்கின்றி திறமை, ஆற்றல் மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும்.

நாடே பாரதூரமான சவால்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில், மக்களின் அன்றாடக் கஷ்டங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அரச ஊழியர்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்” என்றும் சஜித் பிரேமதாச தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு..

வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு..

தொடர் சரிவில் அமெரிக்க டொலர்கள்! அமைச்சர் வெளியிட்ட நம்பிக்கை

தொடர் சரிவில் அமெரிக்க டொலர்கள்! அமைச்சர் வெளியிட்ட நம்பிக்கை

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US