ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் சுமை : அம்பலமான ராஜபக்சர்களின் தவறான முடிவுகள்

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lankan Peoples Financial crisis Value Added Tax​ (VAT)
By Benat Jan 12, 2024 04:00 AM GMT
Report

பொருளாதார பாதிப்பின் சுமையை ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது பொறுப்பாக்கிய அரசாங்கம் தற்போது வற் வரியை அதிகரித்து ஒட்டுமொத்த மக்களையும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொருளாதார முகாமைத்துவத்தில் அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது. பொருளாதார பாதிப்பின் சுமையை ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது பொறுப்பாக்கிய அரசாங்கம் தற்போது வற் வரியை அதிகரித்து ஒட்டுமொத்த மக்களையும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் சுமை : அம்பலமான ராஜபக்சர்களின் தவறான முடிவுகள் | Sri Lanka Economic Crisis

பொருளாதார பாதிப்பின் விளைவால் நிர்மாண கட்டுமானத்துறை, சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறை,தகவல் தொழில்நுட்பம் உட்பட சேவைத்துறைகள் என்பன சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வசதி படைத்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்ற நிலையில் வசதியில்லாதோர் பட்டினியால் போராட்டத்தில் ஈடுபட நேர்ந்தது. தமது பிள்ளைகளின் பசியை போக்குவதற்காக பெரும்பாலான பெற்றோர் பட்டினியில் வாடுகிறார்கள்.

இளைஞர் யுவதிகள் தொழிலின்மையால் விரக்தியில் உள்ளார்கள். மறுபுறம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் 'பராட்டே' சட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வடைந்துள்ளது. இதனால் கல்வித்துறை பாதிக்கப்படுவதுடன், மந்த போசணை வீதமும் உயர்வடையும் இதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வற் வரி அதிகரிப்பினால் பாதிக்கப்படும் ஒப்பந்தகாரர்கள்

வற் வரி அதிகரிப்பினால் பாதிக்கப்படும் ஒப்பந்தகாரர்கள்

மக்களுக்கு வீதிக்கு இறங்குவர் 

1989 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டையில் பாரிய போராட்டம் இடம்பெற்றது. ஜனநாயகத்துடன் வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.பிரான்ஸ் புரட்சியும் வாழ்க்கை செலவு உயர்வு,பணவீக்கம் உயர்வு என்பனவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தோற்றம் பெற்றது. ஆகவே நாட்டு மக்கள் வெகுவிரைவில் வாழ்க்கை செலவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்குவார்கள்.

ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் சுமை : அம்பலமான ராஜபக்சர்களின் தவறான முடிவுகள் | Sri Lanka Economic Crisis

கோட்டாபய  பொருளாதார ரீதியில் எடுத்த தவறான, மூர்க்கத்தனமான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.பொருளாதார படுகொலையாளிகள் யார் என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

பொருளாதார படுகொலையாளிகள் சுதந்திரமாகவும்,உல்லாசமாகவும் வாழுகின்ற நிலையில் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற தேவையில்லாத மக்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரிகளை நடைமுறைப்படுத்துமாறு  குறிப்பிடவில்லை.

வரி திருத்தம் என்று குறிப்பிட்டுக் கொண்டு நேர் மற்றும் நேரில் வரி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு அமைய செயற்படுவதாக இருந்தால் அரசாங்கம் என்பதொன்று தேவையில்லை.

ஜனாதிபதிக்கு நோபள் விருது வழங்கப்பட வேண்டும்: அமைச்சர் டயனா கமகே

ஜனாதிபதிக்கு நோபள் விருது வழங்கப்பட வேண்டும்: அமைச்சர் டயனா கமகே

நிதியமைச்சை நாணய நிதியத்துக்கு பொறுப்பாக்கலாம். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். மொத்த தேசிய உற்பத்தியை 12 சதவீதமாக அதிகரித்துக் கொண்டு அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுமாறு நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

மகிந்த சிறந்த நடிகர்

நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரிகளை நடைமுறைப்படுத்தாமல்  செல்வந்த தரப்பினரிடமிருந்து வரிகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,செல்வந்த வரி,கொடை வரி என்பனவற்றை அறிமுகப்படுத்துமாறும் நாணய நிதியம் குறிப்பிட்டது. ஆனால் அரசாங்கம் அதனை செயற்படுத்தாமல் வற் வரியை அதிகரித்து ஒட்டுமொத்த மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் சுமை : அம்பலமான ராஜபக்சர்களின் தவறான முடிவுகள் | Sri Lanka Economic Crisis

2021 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடியின் போது 1.9 ரில்லியன் பெறுமதியான திறைசேரி பிணைமுறிகளை அரசாங்கம் விநியோகித்தது. இதனை நிதி நிறுவனங்கள் பல பெற்றுக்கொண்டன. இதற்கு அரசாங்கம் 27 சதவீத வரி செலுத்தியது. கடன் மறுசீரமைப்பின் போது இந்த நிறுவனங்களிடமிருந்து வரி அறவிட எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 500 குடும்பங்கள் மாத்திரமே வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மக்களை திசைத்திருப்பும் சிறந்த நடிகர் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். நாட்டு மக்களை அதளபாதாளத்துக்கு தள்ளும் வற் வரியை அதிகரிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்து விட்டு இரு தினங்களுக்கு பின்னர் வரி அதிகரிப்புக்கு நாங்கள் எதிர்ப்பு என்று அறிக்கை வெளியிடுகிறார்.

மகிந்த ராஜபக்ச  உட்பட பொதுஜன பெரமுனவினர் எந்த தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை அறிய முடியவில்லை. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் எந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வரி விலக்கு மற்றும் விசேட சலுகை வழங்க கூடாது என்று சர்வதேச நாணய நிதியம் தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில் அதனை கவனத்திற் கொள்ளாமல் சீன நிறுவனத்துக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள முதலீட்டுக்காக சீன நிறுவனத்துக்கு 15 வருட காலத்துக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதுடன்,அதன் சேவையாளர்களுக்கும் வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது.இதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வரி விலக்குக்கு  மகிந்த ராஜபக்ச  உட்பட பொதுஜன பெரமுனவினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.  

மருந்துப்பொருட்களின் விற்பனையில் வீழ்ச்சி

மருந்துப்பொருட்களின் விற்பனையில் வீழ்ச்சி

அமெரிக்காவில் இருந்து ரணிலுக்கு எதிராக புதிய வியூகம் வகுக்கும் பசில்

அமெரிக்காவில் இருந்து ரணிலுக்கு எதிராக புதிய வியூகம் வகுக்கும் பசில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US