போர் துயரத்தை மீள உணர்த்தும் முன்னாள் பெண் போராளிகளின் வாழ்க்கை (Video)
யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலை ஏற்றம் என்பவற்றால் பல்வேறு சிரமங்களையும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் எமது மக்கள் முகம் கொடுத்து வாழ்கின்றனர்.
அதில் போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலையென்பது சொல்லண்ணா துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
முன்னாள் பெண் போராளி
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் பல முன்னாள் பெண் போராளின் குடும்பங்கள் அன்றாட உணவிற்கே பெரும் அவல நிலையை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக தொழில் வாய்ப்பின்மை, வருமானமின்மை என்பவற்றால் அன்றாட உணவுக்கு பெரும் கஷ்டத்தை அனுபவிக்கின்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இன்றைய சூழ்நிலையில் இவர்களது துயரங்களுக்கு செவி சாய்த்து அவற்றை தீர்த்து வைப்பது என்பது மிக உடனடி தேவையாக உள்ளது. எனவே முன்னாள் போராளி ஒருவரின் கண்ணீர் கதையை சுமந்து வருகிறது இக் காணொளி.