இலங்கை சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக விசேட சுற்றிவளைப்பு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் இதனை நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட பரீட்சார்த்த திட்டத்தில், போதையில் வாகனம் ஓட்டிய 41 பேரை புலனாய்வு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பரிசோதனை கருவிகள்
அவர்களில் 19 பேர் பேருந்து ஓட்டுநர்கள் என்பதும், அதிகரித்து வரும் வீதி விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் முக்கியக் காரணமாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மதுபானம் பாவித்தவர்களைக் கண்டறியும் முறைகள் இருந்தாலும், போதைப்பொருள் பாவித்த சாரதிகளைக் கண்டறியும் முறைகள் இல்லாததால், அவ்வாறான சாரதிகளை அடையாளம் காணும் வகையில் பரிசோதனை கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தச் சாதனங்களைப் பயன்படுத்தி மேல் மாகாணத்தில் முன்னோடித் திட்டமாக கடந்த 12ஆம் திகதி முதல் சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |