வாகன அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வாகன அனுமதி பத்திரத்தை விரைவில் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களை தாமதம் இன்றி பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அட்டைகளை அச்சிடுவதற்கு ஏற்பாடு
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தற்காலிக அனுமதிப் பத்திரத்திற்குப் பதிலாக புதிய சாரதி அனுமதிப் பத்திர அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக இந்த அட்டைகளை அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த மாதம் சுமார் 30 ஆயிரம் பேர் ஒன்லைன் மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri