இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை அமெரிக்க டொலர்கள்! வருட இறுதிக்குள் மாற்றம்
இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைந்தபட்சம் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளைப் பெற முடிந்தால் நிச்சயமாக நாங்கள் கிட்டத்தட்ட 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெறலாம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மிகப் பெரிய வருமானத்தை எதிர்பார்க்கும் இலங்கை அரசாங்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த 2018 உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் எமது வருமானம் சுமார் 4.7 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.
2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க முடிந்தால், அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும். அதை நோக்கியே நான் உழைத்து வருகிறேன். சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்குப் பல திட்டங்கள் உள்ளன.
நாங்கள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க முடியும் என்று நம்புகிறோம். ஆண்டின் இறுதிக்குள் பெரிய வருமானத்தை எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.