இலங்கையை உலுக்கிய பயங்கரம் - 10 மாதங்களில் 500 பேர் படுகொலை
இலங்கையில் கடந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் 500 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பொலிஸ் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதியில் 488 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 52 துப்பாக்கிச் சூடு காரணமாக நடந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
படுகொலைகள்
தங்காலை, நுகேகொடை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளில் அதிகளவான கொலைகள் பதிவாகியுள்ளன.
தங்காலை பிரதேசத்தில் மாத்திரம் 32 கொலைகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் 2018 ஆண்டு மற்றும் 2022 ஆண்டிக்கு இடையில் 7,017 படுகொலைகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான வன்முறைக் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
