தென்னிலங்கையில் பலரின் கவனத்தை ஈர்த்த மக்களின் செயற்பாடு
சமகாலத்தில் தென்னிலங்கையின் பல பாகங்களில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் மாத்தறையில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் மக்களின் மனிதாபிமான செயற்பாடு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அலுமாரியில் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
உங்களிடம் மேலதிகமாக இருக்கும் எதையும் இங்கு அன்பளிப்புச் செய்ய முடியும். அதே போன்று உங்களுக்கு தேவையான எந்தப் பொருளையும் இங்கிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்ற வாசகத்துடன் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், இவ்வாறான மனிதாபிமான செயற்பாடு பலருக்கும் பயனுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri