ரணில் - பசிலுக்கு இடையில் அவசர சந்திப்பு! இரகசிய பின்னணி அம்பலம்
முன்னாள் அமைச்சருக்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக மிகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இடம்பெற்ற இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு மற்றும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைப்பதற்குத் தயார்படுத்துவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
வரவு செலவுத் திட்ட வெற்றிக்கான சகல ஏற்பாடுகளையும் தான் தயார் செய்துள்ள பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வருவதாகக் கூறும் உறுப்பினர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து ரணில் விக்ரமசிங்கவிடம் பசில் ராஜபக்ஷ கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசன அமைப்பாளர் பதவிகள் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்ளுக்கு வழங்கப்படுவதாக தற்போது பரவி வரும் செய்தியின் உண்மை தன்மை குறித்து ஜனாதிபதியிடம் பசில் விளக்கம் கேட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய விரும்புவதாக அறிவித்துள்ளார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, அவ்வாறு வரும் உறுப்பினர்களுக்கு ஆசன அமைப்பாளர் ஆசனங்களை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை வழங்காமல், அவர்களை பொதுஜன பெரமுண உறுப்பினர்களாகவே பேணுமாறும் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி உரிய பதிலை வழங்காத போதிலும் தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் இணைவதனை தவிர்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.