கடன் செலுத்த முடியாத நிலையில் இலங்கை! இறக்குமதிக்கு தேவையான பணமும் இல்லை - ரணில்
நாம் கடன் செலுத்த முடியாத நிலையில் இருப்பது உண்மை. அதனால் 2026/-2027 வரையில் கடன் செலுத்துகைக்கான நிவாரண காலத்தையே நாம் கோருகிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். தற்போது எமக்கு இறக்குமதி செய்யும் அளவுக்கு போதிய அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சவாலானத் திட்டம்
ஜனாதிபதிக்கும் "வட்ஸ் நியூ" இளம் சட்டத்தரணிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2022ஆம் ஆண்டில் 8.3% ஆகக் காணப்பட்ட மொத்த தேசிய உற்பத்தியை நாம் 2023 ஆம் ஆண்டில் 10.9% ஆக மேம்படுத்தினோம். அதனால் மொத்த தேசிய உற்பத்தி உயர்வடையவில்லை. 2% ஆக அது குறைவடைந்தது. இவ்வருடத்தில் 13.1% ஆக மேம்படுத்திக்கொள்ள முடியுமென நம்புகிறோம். அதனால் மொத்த தேசிய உற்பத்தி வலுப்பெறும்.
2028ஆம் ஆண்டளவில் 15.2% ஆக உயர்த்திகொள்ள முடியும். 8.3% -இலிருந்து 15.2% ஆக வலுப்படுத்தப்படுவதை 175% அதிகரிப்பாக குறிப்பிட முடியும்.
முதல் தடவையாக 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 6.7% உபரி ஏற்பட்டுள்ளது. அதனை நாம் 2.3% வரையில் கொண்டு செல்ல வேண்டும்.
தேபோல் வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை 2022 ஆம் ஆண்டில் 10.2% ஆக காணப்பட்டது. அதனை நாம் 2028 ஆண்டளவில் 3.9% வரையில் கொண்டுச் செல்ல வேண்டும். இது இலகுவானதல்ல. அது எம் முன்பிருக்கும் சவாலாகும்.
அதேபோல் 2022ஆம் ஆண்டில் எமது கடன் மொத்த தேசிய உற்பத்தியில் 128 வீதமாகக் காணப்பட்டது. 2032 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியை 95% ஆக அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
2022 ஆம் ஆண்டில் நாம் மொத்த தேசிய உற்பத்தியில் 35% ஐ கடனாக பெற்றுக்கொண்டோம். அதனை 13% குறைக்க வேண்டியது அவசியமாகும். இதனை நாம் முன்னெடுத்துச் செல்ல நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
அதன்போது ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். தற்போது எமக்கு இறக்குமதி செய்யும் அளவுக்கு போதிய அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லை. நாம் போட்டித் தன்மை நிறைந்த டிஜிட்டல் - பசுமை பொருளாதாரத்திற்கு நுழைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அரசு கொடுக்கும் பணத்தினால் நேர்ந்த விபரீதம்! வேலையில்லாமல் வீட்டிலிருந்து சாப்பிட பழகிய இலங்கையர்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |